என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மாங்காய் சமையல்"
- மாம்பழத்தில் குழந்தைகளுக்கு பிடித்தமான பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
- இன்று மாம்பழ ஜாம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
தித்திப்பான பழுத்த மாம்பழம் - 1,
சர்க்கரை - 1 கப்,
மாம்பழ எசன்ஸ் - சில துளிகள்,
இஞ்சி துருவல் - 1 டீஸ்பூன்,
எலுமிச்சை பழம் - 1.
செய்முறை:
மாம்பழத்தை நன்றாக கழுவி தோலை நீக்கி விட்டு சதை பகுதியை மட்டும் எடுத்து நன்றாக அரைத்து கொள்ளவும். (விருப்பப்பட்டால் சிறிய துண்டுகளாகவும் நறுக்கி கொள்ளலாம்.
அடுப்பில் அடி கனமான பாத்திரம் (அ) நான்ஸ்டிக் கடாயை வைத்து மாம்பழத்தை போட்டு 5 நிமிடம் நன்றாக வதக்கவும்.
அடுத்து அதில் எலுமிச்சை சாறு பிழிந்து நன்றாக வதக்கவும்.
அடுத்து அதில் சர்க்கரை சேர்த்து 25 நிமிடங்கள் மிதமான தீயில் கைவிடாமல் கிளறி விடவும்.
மாம்பழ கலவை திக்கான பதம் வரும் போது இஞ்சி துருவல், மாம்பழ எசன்ஸ் சேர்த்து 5 நிமிடங்கள் மிதமான தீயில் கிளறி விடவும்.
இஞ்சி பச்சை வாசனை போனவுடன் அடுப்பை அணைத்து விடவும்.
சிறிது ஜாமை ஒரு தட்டில் ஊற்றினால் அது ஓடாமல் நெகிழ இருக்கும் சமயத்தில் அடுப்பை அணைக்கவும் (ஜாம் போன்றவை செய்யும்போது அடுப்பை 'சிம்'மில் வைத்தால் அடிபிடிக்காது).
நன்றாக ஆறியதும் கண்ணாடி டப்பாவில் போட்டு வைக்கவும்.
இப்போது சூப்பரான மாம்பழ ஜாம் ரெடி.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- இந்த சீசனில் கிடைக்கும் மாங்காயில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
- இது பூரி, சப்பாத்தி, சமோசாவுக்கு தொட்டுக் கொள்ள சூப்பரா இருக்கும்.
தேவையான பொருட்கள் :
நீண்ட கிளி மூக்கு மாங்காய் - 3,
சர்க்கரை - 100 கிராம்,
தோல் நீக்கி, துருவிய இஞ்சி - 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு - கால் டீஸ்பூன்,
தேன் - 1 டீஸ்பூன்.
செய்முறை:
மாங்காய்களைக் கழுவி தோல் நீக்கி துருவிக் கொள்ளவும்.
இத்துடன் இஞ்சித் துருவல் உப்பு, சர்க்கரை சேர்த்துக் கிளறி, ஒரு ஜாடியில் போட்டு, வெள்ளைத் துணியால் வாய்க்கட்டு கட்டி, நல்ல வெயிலில் ஒரு வாரம் வைத்து எடுக்கவும்.
மாந்துருவல் பாகு போல் ஆனதும் தேன் சேர்த்துக் கிளறவும்.
இப்போது சூப்பரான மாங்காய் முரப்பா ரெடி.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- மாங்காயில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
- இன்று மாங்காய் வைத்து சட்னி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
துருவிய தேங்காய் - ஒரு கப்,
தோல் நீக்கி வெட்டிய மாங்காய் - 4 துண்டுகள்,
பச்சை மிளகாய் - 2,
கடுகு - கால் டீஸ்பூன்,
தேங்காய் எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
மாங்காய், தேங்காய், பச்சை மிளகாய், உப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் அரைத்து வழித்தெடுக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து சட்னியில் ஊற்றி கலந்து பரிமாறவும்.
இப்போது சூப்பரான தேங்காய் மாங்காய் சட்னி ரெடி.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- மாம்பழத்தில் பல்வேறு சுவையான ரெசிபிகளை செய்யலாம்.
- இன்று மாம்பழ சாம்பார் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
தித்திப்பும் புளிப்புமான சிறிய மாம்பழங்கள் - 2,
துவரம்பருப்பு - 3 கரண்டி,
அரிசி மாவு - அரை டீஸ்பூன்,
புளி - சிறு எலுமிச்சை அளவு,
பச்சை மிளகாய் - ஒன்று,
சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்,
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு,
கொத்தமல்லி - சிறிதளவு,
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
கடுகு - கால் டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - ஒன்று,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
துவரம்பருப்பை நன்றாக கழுவி 1 மணிநேரம் ஊற வைத்த பின் வேக வைத்து மசித்து கொள்ளவும்..
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மாம்பழத்தை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
ப.மிளகாயை கீறிக்கொள்ளவும்.
கடாயில் 2 கப் நீர் ஊற்றி அடுப்பில் வைத்து அதில் நறுக்கிய மாம்பழம், பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து வேக விடவும்.
பழத்துண்டுகள் வெந்ததும் புளியைக் கரைத்து விட்டு, கொதித்ததும் சாம்பார் பொடி சேர்க்கவும்.
பச்சை வாசனை போனதும் வேக வைத்த பருப்பு சேர்த்து, அரிசி மாவை சிறிது தண்ணீரில் கரைத்து ஊற்றவும்.
மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்து சாம்பாரில் சேர்க்கவும்.
கடைசியாக கொத்தமல்லியைபோட்டு, சாம்பாரை கீழே இறக்கவும்.
இப்போது சூப்பரான மாம்பழ சாம்பார் ரெடி.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் என்றால் மிகவும் பிடிக்கும்.
- இன்று எளிய முறையில் மாம்பழ ஐஸ்கிரீம் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பெரிய மாம்பழம் - 2
பால் - 1 கோப்பை
வெண்ணிலா ஐஸ்கிரீம் - 1 கோப்பை
ஜெல்லி - 2 மேஜைக் கரண்டி
செய்முறை :
பாலை சுண்டக் காய்ச்சி குளிர வைக்கவும்.
மாம்பழத்தை கழுவி தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் போட்டு கூழாக அரைத்துக் கொள்ளவும்.
குளிரவைத்த பாலுடன் ஜெல்லி சேர்த்து நன்கு அடித்துக் கலந்து, அதனையும் மாம்பழச் சாறுடன் சேர்க்கவும்.
பால் கலந்த மாம்பழச்சாற்றை குளிர்சாதனப் பெட்டியில் சுமார் 2 மணி நேரம் வைத்து குளிர வைக்கவும்.
பின்னர் வெளியே எடுத்து வெண்ணிலா ஐஸ்கிரீம் சேர்த்து பரிமாறவும்.
இப்போது சூப்பரான மாம்பழ ஐஸ்கிரீம் ரெடி.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- இந்த சீசனில் கிடைக்கும் மாங்காயில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
- பச்சை மாங்காயை வைத்து ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பச்சை மாம்பழம் - 1
இஞ்சி - சிறிய துண்டு
சர்க்கரை - 1/2 கப்
புதினா இலைகள் - சிறிதளவு
சாட் மசாலா - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
ஐஸ்கட்டி - தேவையான அளவு
தேவையான பொருட்கள் :
செய்முறை :
மாங்காய் தோலை சீவி விட்டு சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
மிக்சி ஜாரில் நறுக்கிய மாங்காயை போட்டு அதனுடன் இஞ்சி, சர்க்கரை, புதினா, சாட் மசாலா, ஐஸ்கட்டி, தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து வடிகட்டவும்.
வடிகட்டிய ஜூஸை ஒரு கண்ணாடி கப்பில் ஊற்றிஅதன் மேல் புதினா, மிளகாய் தூள் தூவி பருகவும்.
இப்போது சூப்பரான பச்சை மாங்காய் ஜூஸ் ரெடி.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.
- இன்று வெயிலுக்கு இதமா மாம்பழ குல்ஃபி செய்வது குறித்து பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பால் - 500 மிலி
சர்க்கரை - 3/4 கப்
சோள மாவு - 2 டீஸ்பூன்
குங்குமப்பூ - 1 சிட்டிகை
மாம்பழ கூழ் - ஒன்றரை கப்
மாம்பழ எசன்ஸ் அல்லது ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
செய்முறை
* நன்கு கனிந்த மாம்பழத்தின் தோலை நீக்கிவிட்டு, அதை நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அதை மிக்ஸி ஜாரில் போட்டு மென்மையாக கூழ் போன்று அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* ஒரு பௌலில் சோள மாவு, சிறிது தண்ணீர் அல்லது பால் சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* மற்றொரு பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும். பால் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் சர்க்கரையை சேர்த்து குறைவான தீயில் வைத்து 15 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். பின் அந்த பாலில் கரைத்து வைத்துள்ள சோள மாவை சேர்த்து கிளறி நன்கு கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
* அடுத்தாக அந்த பாலில் குங்குமப்பூவை சேர்த்து கிளறி, பாலை குளிர வைக்க வேண்டும்.
* பால் குளிர்ந்ததும், அதில் மாம்பழ கூழ், மாம்பழ எசன்ஸ் அல்லது ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* கடைசியாக குல்பி மோல்டுகள் அல்லது சிறிய அளவு டம்ளரில் இந்த கலவையை ஊற்றி ப்ரிஜ் ஃப்ரீசரில் வைக்க வேண்டும். இந்த கலவை நன்கு உறைய வேண்டும். குல்பி நன்கு உறைந்ததும், அதில் ஐஸ் குச்சிகளை வைத்து சாப்பிடலாம்.
* அவ்வளவு தான் சிம்பிள், சுவையான மாம்பழ குல்பி வீட்டிலேயே தயார்.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- மாங்காய் சீசன் ஆரம்பித்து விட்டது.
- மாங்காயில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
தேவையான பொருட்கள்:
மாங்காய் - 2
கடுகு - 2 தேக்கரண்டி
உளுந்து - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - ½ தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 3
பச்சை மிளகாய் - 1
மஞ்சள் தூள் - ½ தேக்கரண்டி
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
வெல்லம் - 150 கிராம்
கறிவேப்பிலை - சிறிதளவு
நல்லெண்ணெய் - 4 தேக்கரண்டி
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
* மாங்காய், ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்
* ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, அதில் வெல்லத்தைப் போட்டு கரையும் வரை சூடுபடுத்தவும். பின்பு, அதை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ளவும்.
* அடிகனமான வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய், நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் போட்டு வதக்கவும்.
* பின்னர் வெட்டிய மாங்காய் துண்டுகள், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் கலந்து 5 நிமிடங்கள் வதக்கவும்.
* பின்பு அதில் வெல்ல தண்ணீர் சேர்த்து கலக்கவும்.
* கலவை கெட்டியாகும் வரை நன்றாக கிளறவும்.
* இப்பொழுது சுவையான 'மாங்காய் பச்சடி' தயார்.
- மாம்பழம், சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பக்கூடியது.
- ஊறுகாய், அல்வா, பர்பி, சாக்லெட் என்று ஏராளமான உணவுகளை மாம்பழத்தில் செய்யலாம்.
தேவையான பொருட்கள்:
மாம்பழத்தை பொரிப்பதற்கு:
மாம்பழம் (விருப்பமான ரகம்) - 1
மைதா - ¼ கப்
சோள மாவு - ¼ கப்
உப்பு - தேவையான அளவு
மிளகுத்தூள் - சிறிதளவு
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
மசாலா தயாரிப்பதற்கு:
வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 1
தக்காளி - 2
முந்திரி - 10
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - சிறிதளவு
இதர பொருட்கள்:
வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
காஷ்மீர் மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்
மிளகாய்ப் பொடி - 1 டீஸ்பூன்
தனியா மற்றும் சீரகப்பொடி தலா - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன்
கசூரி மேத்தி - சிறிதளவு
பிரஷ் கிரீம் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில், மைதா, சோளமாவு, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கட்டியில்லாமல், தோசை மாவு பதத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
இதில், நறுக்கி வைத்துள்ள மாம்பழத் துண்டுகளைப் போட்டு, புரட்டிக் கொள்ள வேண்டும்.
அடுப்பில், வாணலியை வைத்து எண்ணெய்யை சூடாக்க வேண்டும். அதில் மாம்பழத் துண்டுகளைப் போட்டு, மேற்புறம் மட்டும் பொன்னிறமாகும் வரை பொரிக்க வேண்டும்.
இந்த மேல்மாவில் விரும்பினால், முட்டையின் வெள்ளைக் கருவையும் கலந்துகொள்ளலாம்.
பின்னர் அடுப்பில், மற்றொரு வாணலியை வைத்து அதில் சிறிதளவு வெண்ணெய் போட்டு, உருகியதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வதக்க வேண்டும்.
பின்பு, நறுக்கிய வெங்காயம், தக்காளி, முந்திரி, உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். சூடு ஆறியதும், சிறிதளவு தண்ணீர் விட்டு, பசை போல அரைத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் மீண்டும், வாணலியை வைத்து, அதில் வெண்ணெய் போட்டு, உருகியதும், காஷ்மீர் மிளகாய்த் தூள் கலந்து 30 விநாடிகள் வதக்க வேண்டும்.
பின்பு அதில் அரைத்து வைத்துள்ள விழுதைப் போட்டு நன்றாகக் கிளற வேண்டும்.
பின்னர் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், தனியா மற்றும் சீரகத்தூள், தேவையான உப்பு கலந்து மிதமான தீயில் வதக்க வேண்டும்.
5 நிமிடம் கழித்து, மசாலாவின் ஓரத்தில் வெண்ணெய் பிரிந்து வரும்.
அந்த சமயத்தில், பொரித்த மாம்பழத் துண்டுகளை அதில் போட்டு நன்றாகக் கிளற வேண்டும்.
பின்பு அதில் கசூரி மேத்தி, பிரஷ் கிரீம் கலந்து அடுப்பில் இருந்து இறக்கவும்.
இப்போது சுவையான 'மேங்கோ பட்டர் மசாலா' ரெடி.
மாங்காய் - 1,
காய்ந்த மிளகாய் - 8,
பச்சை மிளகாய் - 2,
உ.பருப்பு - 1 கைப்பிடி,
க.பருப்பு - 2 ஸ்பூன்,
பெருங்காயம் சிறு துண்டு,
தாளிக்க
செய்முறை
மாங்காயை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும உ.பருப்பு, க.பருப்பு இவைகளை பொன்னிறமாக வறுக்கவும்.
பின்பு துருவிய மாங்காய், காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், பெருங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும்.
சூடு ஆறியவுடன் மிக்சியில் போட்டு மாங்காய் கலவையை அரைத்த பின்னர் பருப்பு கலவையை சேர்த்து கரகரப்பாய் அரைத்து எடுக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து துவையலில் கலந்து பரிமாறவும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்